Thursday, July 30, 2009

க....க....க.....கல்லூரி சாலை - வானத்தைப்போல

அப்போ நாங்க காலேஜுல செகண்ட் இயர்.



ஒரு சனிக்கிழமை ஹாஸ்டல்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டிருந்தோம். எங்க ரூம்ல ரெண்டு க்ரூப் இருந்துச்சு. சும்மா நச நசன்னு ஒரு க்ரூப்காரங்க பேசிக்கிட்டே இருந்தாங்க. அப்ப ஒரு போட்டி வெச்சோம். சனிக்கிழமை மத்தியானம் அவுட்டிங் உண்டு. அப்போ அங்க உள்ள பாடாவதி தியேட்டர்ல ஏதாவது பாடாவதி படம் பாப்போம். போட்டி என்னன்னா ஸ்டடி டைம்ல எந்த க்ரூப் முதல்ல பேசுறாங்களோ அவங்க ரூம்ல உள்ள எல்லாரையும் ஏதாவது படத்துக்கு கூட்டிக்கிட்டு போகணும். ஸ்டடி டைம் ஸ்டார்ட் ஆச்சு. ஏழரையும் சேர்ந்தே ஸ்டார்ட் ஆச்சு.



சுமார் ஒரு மணிநேரம்தான் ஆகியிருக்கும். என்னோட கிளாஸ்மேட் பக்கத்து ரூம்காரன் ஒருத்தன் ரூமுக்குள்ள வந்தான். நேரா என்கிட்ட வந்து சந்தேகம் கேட்டான். நானும் சைகையிலேயே அமைதியா இருக்கும்படி ரொம்ப நேரம் சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கிற மாதிரி தெரியல. (ஆமா. நாம சொல்படி கேட்டால்ல நம்ம சொல்லுறத நாலு பேர் கேட்பாங்க. (நீதான் டைப் பண்ணுறியா. மெசேஜ் எல்லாம் பின்னுற.))



ரூம் மேட்ஸ் எல்லாம் லைட்டா டென்ஷன் ஆக ஆரம்பிச்சாங்க. சரின்னு அப்படியே விட்டிருந்தா கூட சுபமா முடிஞ்சிருக்குமோ என்னவோ. விதி யாரை விட்டது. நானே ஆரம்பிச்சேன். 'ஏன்டா எவ்ளோ நேரமா அமைதியா இருன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்'னு சொல்லி கல்லூரி மாணவர்களுடைய தாய்மொழியில் நாலு நல்ல வார்த்தைய சொன்னேன். அவன் அமைதியா 'இத முன்னாடியே சொல்லியிருந்தா நான் வேற யாருக்கிட்டயாவது கேட்டிருப்பன்ல. சாரி நண்பா'ன்னு சொல்லிட்டு போயிட்டான்.



ரூம் மேட்ஸ் எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்க. நீதான் படத்துக்கு கூட்டிட்டு போகணும்னு தீர்மானம் போட்டுட்டாங்க. ரூம்ல மொத்தம் பத்து பேரு. ஒரு தியேட்டருல 'டாடி'ன்னு இங்கிலீஷ் டப்பிங் படம் போட்டிருந்தாங்க. ரூம் மேட்ஸ் எல்லாரும் அந்த படத்துக்குக்தான் போகணும்னு சொன்னாங்க. இன்னொரு தியேட்டருல 'வானத்தைப்போல' படம் போட்டிருந்தாங்க. நான் இந்த படத்துக்கு கூப்பிட்டா யாரும் வரமாட்டானுங்கன்னு நெனைச்சிக்கிட்டு நான் அந்த படத்துக்குத்தான் கூட்டிக்கிட்டு போவேன்னு சொல்லிட்டேன். எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க. (பேசாம இங்கிலீஷ் படமே பாத்திருக்கலாம். விதி யாரை விட்டது)

எல்லாரும் சாப்பிட்டு முடித்தபிறகு தியேட்டருக்கு படையா கிளம்பியாச்சு. பத்து பேருக்கு ரூ. 28.50 கொடுத்து (ஒரு டிக்கெட் ரூ2.85) டிக்கெட் எடுத்து உள்ளே போயாச்சு. சனிக்கிழமையில மேக்ஸிமம் எங்க காலேஜ் பசங்க மட்டும்தான் தியேட்டருல இருப்பாங்க. அன்னைக்குன்னு பார்த்து விக்ரமன் படத்து பேமிலி ஆடியன்ஸும் நெறை பேரு இருந்தாங்க. உள்ள போயி முதல் வரிசையிலே உட்கார்ந்தாச்சு. படமும் ஆரம்பிச்சாச்சு. அதுவரைக்கும் அமைதியா இருந்தவனுங்க கேப்டன நக்கலடிக்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு டயலாக்குக்கும் எதிர் டயலாக் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. பின்னால உட்கார்ந்து இருந்த ஒரு அம்மா டென்ஷனாயி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாயிருச்சு. 'ஓ'ன்னு ஊளையிட ஆரம்பிச்சிட்டானுங்க பசங்க. ஜெனரேட்டர் போட்டு படம் ஆரம்பிச்ச பிறகும் கத்திக்கிட்டே இருந்தாங்களா, அந்த அம்மா மறுபடியும் டென்ஷனாகி 'குடும்ப படம் ஓடுற தியேட்டருல வந்து சத்தம் போடுறீங்களே. வேற தியேட்டருல போயி சத்தம் போட வேண்டியதுதானே'ன்னு சொல்ல வாய் வார்த்த தடிக்க ஆரம்பிச்சுச்சு. பக்கத்துல உட்கார்ந்து இருந்தவங்கல்லாம் அந்த அம்மாவுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.

தியேட்டர் மேனேஜர் படத்த நிறுத்திட்டு உள்ள வந்துட்டாரு. எல்லாம் ஒண்ணுமே தெரியாத மாதிரி அமைதியா இருந்தானுங்க. அவர் என்கிட்ட வந்து 'படிக்கிற பசங்க இது மாதிரியெல்லாம் பண்ணலாமா'ன்னு கேட்டுட்டு 'அமைதியா படம் பாருங்க'ன்னு சொல்லிட்டு வெளியே போகப்போனாரு. அப்போ எங்கள்ள ஒருத்தன் 'படிக்கிற பசங்கன்னா யாரு'ன்னு சத்தமா கேட்க, அவரு மறுபடியும் உள்ள வந்து எல்லாரும் வெளில போங்கன்னு சொல்லிட்டாரு. நம்மலால பப்ளிக் டிஸ்டர்ப் ஆகக்கூடாதுங்கற நல்லெண்ணத்துல நான் எந்திருச்சு வெளில வந்துட்டேன். பசங்களும் ஒவ்வொருத்தனா வெளில வந்துட்டானுங்க.

இதையெல்லாம் அமைதியா பாத்துக்கிட்டிருந்த சீனியர் பசங்க, அவிங்கள யாருமே மதிக்கமாட்டேங்குறாங்கங்கிற வயித்தெரிச்செலில் ஹாஸ்டல் வார்டனுகிட்ட போட்டு கொடுத்திட்டானுங்க.

இதன் விளைவு : என்னோட முதல் சஸ்பென்ஷன் ஆர்டர் ரெடி ஆயிடுச்சு.

இதனால் அறியப்படும் நீதி: கேப்டன யாரும் நக்கல் பண்ணாதீங்க.

11 comments:

நையாண்டி நைனா said...

அப்படியே பிக்கப் பண்ணி வா மாமு.... அசத்துரே..

நையாண்டி நைனா said...

அந்த word verification-ஐ எடுத்துரு மாமு.

Anonymous said...

//அப்படியே பிக்கப் பண்ணி வா மாமு.... அசத்துரே..//


ரொம்ப நன்றி மாப்ளே.

குடிகாரன் said...

//அந்த word verification-ஐ எடுத்துரு மாமு. //

எடுத்தாச்சு மாப்ளே

விக்னேஷ்வரி said...

ஹாஹாஹா.... கல்லூரி நாட்கள் எப்போ நினைச்சாலும் அழகு தான்.

கலையரசன் said...

ஒரு இடத்துல கவர்ச்சி இருக்கு..
மத்தபடி ரசிச்சு சிரித்தேன்!

என்னது.. எந்த இடத்துலையா?
கேப்டன்ன்னு பேரு போட்ட இடம்தாம்பா!!

குடிகாரன் said...

//ஹாஹாஹா.... கல்லூரி நாட்கள் எப்போ நினைச்சாலும் அழகு தான்.//

நன்றி விக்னேஷ்வரி

குடிகாரன் said...

//கலையரசன் said...
ஒரு இடத்துல கவர்ச்சி இருக்கு..
மத்தபடி ரசிச்சு சிரித்தேன்!

என்னது.. எந்த இடத்துலையா?
கேப்டன்ன்னு பேரு போட்ட இடம்தாம்பா!!//

ரசித்தற்கு நன்றி கலையரசன்.

இனிமேல் கவர்ச்சியான அம்சங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்கிறேன்.

Suresh Kumar said...

கல்லூரி நாட்களை ஞாபக படுத்துறீங்களே

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நாங்களும் இதேமாதிரி கோவை பீளமேடு சாந்தியில் அடிமைப் பெண் படம் பார்த்தோம். 1999ல்,

Nathanjagk said...

அட்டகாசம். விறுவிறுன்னு இருக்க படிக்க! ​மொத்து வாங்காம தி​யேட்டரில இருந்து எஸ்ஸானதுக்கு வாழ்த்துக்கள்!!!