இது ஒரு தொடர்கதைக்கான சிறிய முயற்சி. தங்கள் ஆதரவை அள்ளி வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
காட்சி - 1
இடம் : ஏதாவது ஒரு மத்திய சிறைச்சாலை.
நடிகர்கள் : சிறைச்சாலை வார்டன், நமது கதாநாயகன் மதியழகன், சக கைதி ராமசாமி.
சி.வா : (தனது அறையில் விநாயகர் படம் போட்ட காலண்டர் முன்பு) ஆண்டவா எல்லாரையும் காப்பாற்று (என்றபடி தனது ரவுண்ட்ஸிற்கு கிளம்புகிறார்.
வரும் வழியில் சோகமாக கையில் புத்தகத்துடன் அமர்ந்திருக்கும் மதியைப் பார்த்து,
சி.வா : மதி, இங்கே வாப்பா.
மதி: சொல்லுங்க சார்.
சி.வா: நீ இங்கே வந்து இன்னையோட ஆறு வருஷம் முடிய போகுது. உன்னோட நன்னடத்தைக்காக உன்னை இன்னும் ஒரு வாரத்திலே ரிலீஸ் பண்ணலாமுன்னு மேலிடத்திற்கு லெட்டர் கொடுத்திருக்கிறேன். உன்கிட்டே சொல்லாமுண்ணுதான் வந்தேன்.
மதி: ரொம்ப நன்றி சார்.
சி.வா: அப்போ நான் கிளம்புறேன்.
மதி: சரிங்க சார்.
சி்.வா (மனதிற்குள்): எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய பிள்ளை. அதற்க்குத்தான் எத்தனை பிரச்சனை. (என்றபடி தன் அறைக்கு திரும்புகிறார்).
சக கைதி: என்னப்பா மதி, வெளிய போப்போற மாதிரி தெரியுது. ஆனா, சோகமான மூஞ்சை மட்டும் மாத்தவே மாட்டியா?
மதி லேசாக முறைக்கிறான்
ச.கை: அதானே பார்த்தேன். பேசிடாதே. வாயில வச்சிருக்கற முத்து கொட்டிட போகுது.
என்றபடி தன் செல்லுக்குள் செல்கிறான்.
(தொடரும்)
-----------------------------------------------------------------------------------
தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்க்கபடுகின்றன. நன்றி.
------------------------------------------------------------------------------------
Thursday, July 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
சும்மா டெஸ்டிங்.
வாழ்த்துக்கள் குடிகாரன்!
இது சீரியஸான இடுகையா இல்ல சிரிப்பு இடுகையா?
குடிகாரன்...
ஒரு மெகா சீரியல் எழுத அத்தனை திறமையும் உமக்குண்டு......
//ஜெகநாதன் said...
வாழ்த்துக்கள் குடிகாரன்!
இது சீரியஸான இடுகையா இல்ல சிரிப்பு இடுகையா?//
நன்றி திரு.ஜெகநாதன்.
இது முழுக்க முழுக்க சீரியஸான இடுகை.
//செந்தழல் ரவி said...
குடிகாரன்...
ஒரு மெகா சீரியல் எழுத அத்தனை திறமையும் உமக்குண்டு...... //
நன்றி திரு.செந்தழழார் அவர்களே.
Post a Comment