Sunday, August 30, 2009

ஓட்டு போட்ட மக்களே இப்போ சந்தோஷம்தானே

போட்டோவ சந்தோஷமா பாருங்க. நல்லா என்ஜாய் பண்ணுங்க.Saturday, August 22, 2009

நீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க

நீங்க தமிழர்ன்னா இதைப் படிக்காதீங்க.

-----------------------------------------------------------
சுவாமி குடிகாரானந்தாவின் உளறல்கள்
-----------------------------------------------------------

தமிழன் என்றொரு இனமுண்டு
தனியே அவனுக்கோர் குணமுண்டு
விலைக்கு வாங்க மனமுண்டு
வாங்கும் அளவுக்கு பணமுண்டு
எதிர்த்து கேட்டால் உதையுண்டு
மீறினால் போவான் கொலையுண்டு.

இப்படிக்கு,

தமிழனை வேரறுக்கப்போவோர் சங்கம்.

தலைமையிடம்: போபாலபுரம், சென்னை.

செயலகம்: கோயஸ் தோட்டம், சென்னை.

முக்கிய அறிவிப்பு: எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை. போலிகளை கண்டு ஏமாறாதீர்கள்.

Tuesday, August 18, 2009

துபாயில் இடிந்து விழுந்த ஆறு மாடி கட்டிடம் - படங்கள்Saturday, August 15, 2009

அலமேலுவுக்கு அஞ்சு புள்ள பொறந்தது எப்படி??

இது ஒரு உண்மை அனுபவம்.


'புள்ள பொறக்குறது மேலே இருக்குறவன் கொடுக்கிற வரம்' அப்படின்னு துபாயின் பெரும்பான்மை இனமான MM (மானாட மயிலாட இல்லை. Maலையாள Muஸ்லீம்)ங்கள் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்காங்க. இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு சின்ன(!) அனுபவம்.

ஒரு மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ மேற்படி இனத்தை சேர்ந்த நண்பர் ஒருத்தர் இருந்தாரு. ரொம்ப நல்லா பழகுவாரு. தங்கமான குணம். கல்யாணம் ஆகி அஞ்சு வருஷத்துல நாலு குழந்தைகள். ரொம்ப சந்தோஷமான குடும்பம். நார்மலான சம்பளம். கரெக்டா ஊருக்கு பணம் அனுப்பிடுவாரு. (அப்போதைக்கு Exchange Rate 1திர்ஹாமுக்கு 10ரூபாய் 70பைசா). நாலாவது குழந்தை பிறந்ததற்குப்பிறகு ரெண்டு மாச லீவுல ஊருக்கு போனாரு.

லீவு முடிஞ்சு திரும்பி வந்து இரண்டு வாரத்துக்கு பிறகு எல்லாத்துக்கும் ஸ்வீட் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. ஏன்னு கேட்டா மனைவி முழுகாம இருக்காங்கன்னு சொன்னாரு. கம்பெனியில அவர கிண்டல் பண்ணாத ஆளே கிடையாது. லீவுக்கு போனா வேற வேலையே இல்லையான்னு கலாய்ச்சுகிட்டு இருந்தாங்க. அவரு அமைதியா சொன்னாரு 'எல்லாம் மேலே இருக்கிறவன் கொடுக்கிறான். நம்ம என்ன பண்ணுறது'ன்னு. எல்லாம் முடிஞ்சு நானும் வேற கம்பெனி மாறியாச்சு.

சமீபத்துல ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு சூப்பர் மார்க்கெட்டுல அவரை சந்திச்சேன். ஆளே ரொம்ப மாறி போயி 'ஓ'ன்னு இருந்தாரு. 'என்னண்ணே இப்படி ஆயிட்டீங்க'ன்னு கேட்டதுக்கு, 'என்ன தம்பி பண்ணுறது. குடும்பம் பெரிசா போச்சு. ரொம்ப கஷ்டமாயிருக்கு' அப்படின்னு சொன்னாரு.

காரணம் இதுதான். அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். சம்பளம் கொஞ்சமாதான் ஏறியிருக்கு. (ஆனா இப்போதைய Exchange Rate 1திர்ஹாமுக்கு 13ரூபாய்). இருந்தாலும் பேமிலிய மெயின்டெயின் பண்ண முடியாத அளவுக்கு செலவுகள். ஏகப்பட்ட கடன் (துபாயிலும், நாட்டிலும்). ரொம்ப ஒடிஞ்சு போயி எல்லாத்தையும் சொன்னாரு. நானும் என்னோட மொபைல் நம்பர கொடுத்து ஏதாவது ஹெல்ப் வேணும்னா போன் பண்ண சொல்லிட்டு வந்துட்டேன்.

நேத்து போன் பண்ணியிருந்தாரு. 'தம்பி இப்போ வேலை பாக்குற கம்பெனியில என்னை வேலைய விட்டு தூக்குற மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க'ன்னு சொல்லிக்கிட்டிருக்கும் போது போன் கட்டாயிருச்சு. திரும்ப போன் பண்ணி பேசும்போது ரொம்ப புலம்பினாரு. 'அப்போ எல்லாரும் கிண்டல் பண்ணும்போது எனக்கு ஒன்னுமே பெரிசா தெரியல. இப்போதான் எல்லாம் புரியுது. எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துக்க மாட்டான். நாமளும் வாழ்க்கைய புரிஞ்சு நடந்துக்கணும்' அப்படின்னு எனக்கு அட்வைஸ் வேற பண்ணுனாரு. நல்ல வேளை கிரெடிட் கார்டு எதுவும் இல்லை.

இன்னைக்கு காலையில ஏர்போர்ட்ல இருந்து போன் பண்ணி 'என்ன கேன்ஸல் பண்ணிட்டாங்க. ஏர்போர்ட்ல இருக்கேன்' அப்படின்னு சொன்னாரு. 'இன்னைக்கு லேபர் ஆபிஸ் லீவாச்சே. எப்படி கேன்ஸல் பண்ண முடியும்'ன்னு கேட்டதுக்கு 'அதெல்லாம் முந்தா நேத்தே எல்லாத்தையும் முடிச்சுட்டாங்க. எனக்கு இப்போதான் தெரியும்'ன்னு சொன்னாரு. ரொம்ப வருத்தத்தோட இன்னொரு பிரண்டுக்கு போன் பண்ணி சொன்னேன்.

அவரு சொன்னதை கேட்டு திகைச்சு போயிட்டேன். அவரோட மனைவி எட்டாவது பிரசவத்துக்காக ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.(ஒரு குழந்தை இறந்து போயிடுச்சாம்). பிரசவம் பிரச்சனையா இருக்குமுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கு பணம் ரெடி பண்ண வழி தெரியாம கம்பெனி மெட்டீரியல்ல கைய வச்சுட்டாரு. அதனாலதான் வேலைய விட்டு தூக்கிட்டாங்கன்னாரு. என்னால அதுக்கு மேல எதுவும் சோல்ல முடியாம போனை வச்சுட்டேன்.

வளர்ந்த நாட்டுல இருக்கறவங்களே அதிக குழந்தை அதிக செலவுன்னு ஒன்னு ரெண்டோட நிறுத்தும் போது நமக்கு ஏன் இத்தனை?. யோசிப்போம்.

சிறு குடும்பம் சீரான வாழ்வு.
பெரிய குடும்பம் பேராபத்து.

------------------

தலைப்பு : கடைசியா டைப் பண்ணுனதுனால என்ன வைக்கிறதுன்னு தெரியல.

-----------------

Thursday, August 6, 2009

வாழைப்பழ காமெடி - ஓர் அனுபவம்

இது நான் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது நடந்தது.

ஒருநாள் தமிழாசிரியர் பாடம் நடத்தி்க்கொண்டிருக்கும்போது ஒரு மாணவனை எழுப்பி அவர் சொல்வதை திருப்பிச் சொல்ல சொன்னார்.

ஆசி: தம்பி, எழுந்திரு. நான் சொல்வதை திரும்பச்சொல்.

மாண1: சரி அய்யா.

ஆசி: வாழைப்பழம் நழுவி பாலில் விழுந்தது. சொல்லுப்பா.

மாண1: வாளப்பளம் நளுவி பாழில் விளுந்தது.

ஆசி: கிழிஞ்சுது போ. அப்படி இல்லப்பா. வாழைப்பழம். சொல்லு.

மாண1: வாளைப்பளம்.

ஆசி: நாக்கை நல்லா மடக்கணும். சரியா.

மாண1: சரி அய்யா.

ஆசி: இப்ப சொல்லு.

மாண1: வாழைப்பழம்.

ஆசி: நன்று. முழுவதுமாக சொல்.

மாண1: வாழைப்பழம் நழுவி பாழில் விழுந்தது.

ஆசி: தம்பி. பாழில் இல்ல. பாலில். நாக்கை கொஞ்சமாக மடக்கினால் போதும்.
சொல்லு.

மாண1: வாழைப்பழம் நழுவி பாலில் விழுந்தது.

ஆசி: மிகவும் சரி. (மற்றொரு மாணவனை நோக்கி) தம்பி நீ சொல்லு.

மாண2: வாயப்பயம் நயுவி பாயில் வியுந்தது.

ஆசி: (திகைப்புடன்) மறுபடியும் சொல்லு.

மாண2: வாயப்பயம் நயுவி பாயில் வியுந்தது.

ஆசி: வாழ்வதற்கு எல்லாம் பயப்பட கூடாது. அது வாயப்பயம் இல்லை.
வாழைப்பழம். சொல்லு.

மாண2: வாயைப்பயம்.

ஆசி: தம்பி 'ய' இல்லப்பா. 'ழ'.

மாண2: ய

ஆசி: தம்பி நாக்க நல்லா மடிச்சு சொல்லு. 'யா'. (மாணவர்கள் சிரிக்கிறார்கள்).

ஆசி: (தவறை உணர்ந்து) ச்சே.ச்சே 'ழா'. சொல்லு.

மாண2: யா

ஆசி: தம்பி நாளைக்கு வரும் போது அப்பாவ கூட்டிக்கிட்டு வா. சரியா.

மாண2: சரி அய்யா.


மறுநாள் மாணவனின் தந்தையிடம்,

மா.த: வணக்கம் சார். வரசொன்னியலாம்ல.

ஆசி: வணக்கம். உங்க பையனுக்கு 'பழம்'ன்னு சொல்லவே தெரியவில்லை.
அதைச்சொல்லத்தான் வரச்சொன்னேன்.

மா.த: ஆமாஞ்சார். நானும் பாத்திருக்கேன். "அவன 'பயம் பயம்'ன்னு சொல்லச்சொன்னா, பயபுள்ள 'பயம் பயம்'ன்னுதான் சொல்றான ஒயிய 'பயம் பயம்'ன்னு சொல்லவே மாட்டங்குறான்".

அதிலிருந்து அந்த ஆசிரியர் அந்த வகுப்புக்கு வரவே இல்லை.
அந்த மாணவனின் பட்டபெயர் 'பயம்' என்று ஆனது.

-----------------------------------------------------------------------------------
தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி.
------------------------------------------------------------------------------------

Thursday, July 30, 2009

க....க....க.....கல்லூரி சாலை - வானத்தைப்போல

அப்போ நாங்க காலேஜுல செகண்ட் இயர்.ஒரு சனிக்கிழமை ஹாஸ்டல்ல உட்கார்ந்து படிச்சிக்கிட்டிருந்தோம். எங்க ரூம்ல ரெண்டு க்ரூப் இருந்துச்சு. சும்மா நச நசன்னு ஒரு க்ரூப்காரங்க பேசிக்கிட்டே இருந்தாங்க. அப்ப ஒரு போட்டி வெச்சோம். சனிக்கிழமை மத்தியானம் அவுட்டிங் உண்டு. அப்போ அங்க உள்ள பாடாவதி தியேட்டர்ல ஏதாவது பாடாவதி படம் பாப்போம். போட்டி என்னன்னா ஸ்டடி டைம்ல எந்த க்ரூப் முதல்ல பேசுறாங்களோ அவங்க ரூம்ல உள்ள எல்லாரையும் ஏதாவது படத்துக்கு கூட்டிக்கிட்டு போகணும். ஸ்டடி டைம் ஸ்டார்ட் ஆச்சு. ஏழரையும் சேர்ந்தே ஸ்டார்ட் ஆச்சு.சுமார் ஒரு மணிநேரம்தான் ஆகியிருக்கும். என்னோட கிளாஸ்மேட் பக்கத்து ரூம்காரன் ஒருத்தன் ரூமுக்குள்ள வந்தான். நேரா என்கிட்ட வந்து சந்தேகம் கேட்டான். நானும் சைகையிலேயே அமைதியா இருக்கும்படி ரொம்ப நேரம் சொல்லிப்பார்த்தேன். அவன் கேட்கிற மாதிரி தெரியல. (ஆமா. நாம சொல்படி கேட்டால்ல நம்ம சொல்லுறத நாலு பேர் கேட்பாங்க. (நீதான் டைப் பண்ணுறியா. மெசேஜ் எல்லாம் பின்னுற.))ரூம் மேட்ஸ் எல்லாம் லைட்டா டென்ஷன் ஆக ஆரம்பிச்சாங்க. சரின்னு அப்படியே விட்டிருந்தா கூட சுபமா முடிஞ்சிருக்குமோ என்னவோ. விதி யாரை விட்டது. நானே ஆரம்பிச்சேன். 'ஏன்டா எவ்ளோ நேரமா அமைதியா இருன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்'னு சொல்லி கல்லூரி மாணவர்களுடைய தாய்மொழியில் நாலு நல்ல வார்த்தைய சொன்னேன். அவன் அமைதியா 'இத முன்னாடியே சொல்லியிருந்தா நான் வேற யாருக்கிட்டயாவது கேட்டிருப்பன்ல. சாரி நண்பா'ன்னு சொல்லிட்டு போயிட்டான்.ரூம் மேட்ஸ் எல்லாம் ஒண்ணு கூடிட்டாங்க. நீதான் படத்துக்கு கூட்டிட்டு போகணும்னு தீர்மானம் போட்டுட்டாங்க. ரூம்ல மொத்தம் பத்து பேரு. ஒரு தியேட்டருல 'டாடி'ன்னு இங்கிலீஷ் டப்பிங் படம் போட்டிருந்தாங்க. ரூம் மேட்ஸ் எல்லாரும் அந்த படத்துக்குக்தான் போகணும்னு சொன்னாங்க. இன்னொரு தியேட்டருல 'வானத்தைப்போல' படம் போட்டிருந்தாங்க. நான் இந்த படத்துக்கு கூப்பிட்டா யாரும் வரமாட்டானுங்கன்னு நெனைச்சிக்கிட்டு நான் அந்த படத்துக்குத்தான் கூட்டிக்கிட்டு போவேன்னு சொல்லிட்டேன். எல்லாரும் சரின்னு சொல்லிட்டாங்க. (பேசாம இங்கிலீஷ் படமே பாத்திருக்கலாம். விதி யாரை விட்டது)

எல்லாரும் சாப்பிட்டு முடித்தபிறகு தியேட்டருக்கு படையா கிளம்பியாச்சு. பத்து பேருக்கு ரூ. 28.50 கொடுத்து (ஒரு டிக்கெட் ரூ2.85) டிக்கெட் எடுத்து உள்ளே போயாச்சு. சனிக்கிழமையில மேக்ஸிமம் எங்க காலேஜ் பசங்க மட்டும்தான் தியேட்டருல இருப்பாங்க. அன்னைக்குன்னு பார்த்து விக்ரமன் படத்து பேமிலி ஆடியன்ஸும் நெறை பேரு இருந்தாங்க. உள்ள போயி முதல் வரிசையிலே உட்கார்ந்தாச்சு. படமும் ஆரம்பிச்சாச்சு. அதுவரைக்கும் அமைதியா இருந்தவனுங்க கேப்டன நக்கலடிக்க ஆரம்பிச்சாங்க. ஒவ்வொரு டயலாக்குக்கும் எதிர் டயலாக் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. பின்னால உட்கார்ந்து இருந்த ஒரு அம்மா டென்ஷனாயி சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க.

அந்த நேரம் பார்த்து கரண்ட் கட்டாயிருச்சு. 'ஓ'ன்னு ஊளையிட ஆரம்பிச்சிட்டானுங்க பசங்க. ஜெனரேட்டர் போட்டு படம் ஆரம்பிச்ச பிறகும் கத்திக்கிட்டே இருந்தாங்களா, அந்த அம்மா மறுபடியும் டென்ஷனாகி 'குடும்ப படம் ஓடுற தியேட்டருல வந்து சத்தம் போடுறீங்களே. வேற தியேட்டருல போயி சத்தம் போட வேண்டியதுதானே'ன்னு சொல்ல வாய் வார்த்த தடிக்க ஆரம்பிச்சுச்சு. பக்கத்துல உட்கார்ந்து இருந்தவங்கல்லாம் அந்த அம்மாவுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.

தியேட்டர் மேனேஜர் படத்த நிறுத்திட்டு உள்ள வந்துட்டாரு. எல்லாம் ஒண்ணுமே தெரியாத மாதிரி அமைதியா இருந்தானுங்க. அவர் என்கிட்ட வந்து 'படிக்கிற பசங்க இது மாதிரியெல்லாம் பண்ணலாமா'ன்னு கேட்டுட்டு 'அமைதியா படம் பாருங்க'ன்னு சொல்லிட்டு வெளியே போகப்போனாரு. அப்போ எங்கள்ள ஒருத்தன் 'படிக்கிற பசங்கன்னா யாரு'ன்னு சத்தமா கேட்க, அவரு மறுபடியும் உள்ள வந்து எல்லாரும் வெளில போங்கன்னு சொல்லிட்டாரு. நம்மலால பப்ளிக் டிஸ்டர்ப் ஆகக்கூடாதுங்கற நல்லெண்ணத்துல நான் எந்திருச்சு வெளில வந்துட்டேன். பசங்களும் ஒவ்வொருத்தனா வெளில வந்துட்டானுங்க.

இதையெல்லாம் அமைதியா பாத்துக்கிட்டிருந்த சீனியர் பசங்க, அவிங்கள யாருமே மதிக்கமாட்டேங்குறாங்கங்கிற வயித்தெரிச்செலில் ஹாஸ்டல் வார்டனுகிட்ட போட்டு கொடுத்திட்டானுங்க.

இதன் விளைவு : என்னோட முதல் சஸ்பென்ஷன் ஆர்டர் ரெடி ஆயிடுச்சு.

இதனால் அறியப்படும் நீதி: கேப்டன யாரும் நக்கல் பண்ணாதீங்க.

Tuesday, July 21, 2009

வீர பாண்டிய கட்டபொம்மன் - ரீமேக்

டிஸ்கி 1: இதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே. இது யாரையும் புண்படுத்துவதற்காக அல்ல.

டிஸ்கி 2: அப்படின்னு சொன்னா நம்பவா போறீங்க.

நம்ம நடிகர் திலகம் நடிச்ச படத்தை எல்லாரும் பாத்திருப்பீங்க. அதில் நம் இளைய தலவிதி (சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் - தளபதி) நடித்திருந்தால்.......

ஒரு சிறிய கற்பனை. ஜாக்ஸன் ஒரு தியேட்டர் ஓனர்.

இ.த: ன்னா, நீங்தான் சாக்சன் தொரைங்ளா.

ஜாக்ஸன் : நீர்தான் இளைய தலைவலியோ.

இ.த: ஓய் யார பாத்து தலைன்ன.

ஜாக்: (மனதிற்குள்) தலைவலின்னதுக்கு கோபம் வரலையாம். தலைன்னு சொன்னதுக்கு கோபம் வந்திருச்சாம். (சத்தமாக) சாரி தளபதின்னு சொன்னேன். டங்க் ஸிலிப் ஆயிடுச்சு.

இ.த: ன்னா, நீங் வரச்சொன்னதா சொன்னாங்னா. எதுக் வரச்சொன்னீங்னா.

ஜாக்: இது வரையில் நீங்கள் எங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவில்லை. படத்தை போஸ்டரில் பார்த்து இறந்தவர்களுக்கு ஜீவனாம்சமும் கொடுக்கவில்லை. இந்த பாக்கிக்கெல்லாம் வட்டியும் கொடுக்கவில்லை.

இ.த: நஷ்ட ஈடு, ஜீவனாம்சம், வட்டி. இல்ல நான் தெரியாமத்தான் கேக்றேன். நான் நடிக்கிறேன். வேலை வெட்டி இல்லாதவங்க தியேட்டர்ல வந்து பாக்குறாங்க. நான் எதுக்குங்க குடுக்கணும் நஷ்ட ஈடு. நீங் என்னோட சூட்டிங் வந்தீங்களா, கிளாப் அடிச்சீங்களா, லைட் பாயா இருந்தீங்களா, கேமரா லென்ஸ தொடச்சு கொடுத்தீங்களா, என்னாலய பாக்க முடியாத என் மூஞ்சை மேக்-அப் போட்டு மாத்தினீங்களா, படம் ஓடுற தியேட்டர்ல ஆப்பரேட்டராவாது வேலை பாத்திருக்கீங்களா? இல்ல நீங் புரடீயூசருங்களா, டேரக்ட்டருங்களா? மானங்கெட்டவருங்களே என்கிட்ட எதுக்குங் கேட்குறீங் ஜீவனாம்சம், வட்டி. இன்னொரு தடவ இப்படி கேட்டீங்னா வேட்டைகாரனும் உங்க தியேட்டர்லதானுங்கோ.

ஜாக் : உங்களை அழைத்து வரச்சொல்லி ஆளனுப்பினேனே?

இ.த : அப்படியா? அவன் புத்திசாலி. எங்க என் அடுத்த படத்து ப்ரி வ்யூ ஷோவுக்கு அழைச்சிக்கிட்டு போயிடுவேனோன்னு பயந்திருப்பான். என்ன இதுவரைக்கும் யாரும் கூப்பிட்டதே இல்ல. நீ என்னடான்னா ஆள் அனுப்புனன்னு என்கிட்டயே சொல்ற. இனிமேலும் உன்ன விட்டுவைக்க கூடாது. ஆனாலும் அடுத்த படத்தை ரிலீஸ் பண்ண தியேட்டர் கிடைக்காம போயிடுமோன்னும் பயமா இருக்கு.

ஜாக் : வேண்டாம். இதோட நிறுத்திக்கலாம். நான் நாளைக்கே தியேட்டர இடிச்சு ஊரு கோயிலுக்கு எழுதி வெச்சுட்டு காசில போயி செட்டில் ஆகப்போறேன்.

இ.த: ன்னா, ன்னா

ஜாக் வெளில போன வேகத்துக்கு இன்னேரம் காசிக்கே போயி சேர்ந்திருப்பாரு.

-----------------------------------------------------------------------------------
தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி.
------------------------------------------------------------------------------------