Thursday, August 6, 2009

வாழைப்பழ காமெடி - ஓர் அனுபவம்

இது நான் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்தபோது நடந்தது.

ஒருநாள் தமிழாசிரியர் பாடம் நடத்தி்க்கொண்டிருக்கும்போது ஒரு மாணவனை எழுப்பி அவர் சொல்வதை திருப்பிச் சொல்ல சொன்னார்.

ஆசி: தம்பி, எழுந்திரு. நான் சொல்வதை திரும்பச்சொல்.

மாண1: சரி அய்யா.

ஆசி: வாழைப்பழம் நழுவி பாலில் விழுந்தது. சொல்லுப்பா.

மாண1: வாளப்பளம் நளுவி பாழில் விளுந்தது.

ஆசி: கிழிஞ்சுது போ. அப்படி இல்லப்பா. வாழைப்பழம். சொல்லு.

மாண1: வாளைப்பளம்.

ஆசி: நாக்கை நல்லா மடக்கணும். சரியா.

மாண1: சரி அய்யா.

ஆசி: இப்ப சொல்லு.

மாண1: வாழைப்பழம்.

ஆசி: நன்று. முழுவதுமாக சொல்.

மாண1: வாழைப்பழம் நழுவி பாழில் விழுந்தது.

ஆசி: தம்பி. பாழில் இல்ல. பாலில். நாக்கை கொஞ்சமாக மடக்கினால் போதும்.
சொல்லு.

மாண1: வாழைப்பழம் நழுவி பாலில் விழுந்தது.

ஆசி: மிகவும் சரி. (மற்றொரு மாணவனை நோக்கி) தம்பி நீ சொல்லு.

மாண2: வாயப்பயம் நயுவி பாயில் வியுந்தது.

ஆசி: (திகைப்புடன்) மறுபடியும் சொல்லு.

மாண2: வாயப்பயம் நயுவி பாயில் வியுந்தது.

ஆசி: வாழ்வதற்கு எல்லாம் பயப்பட கூடாது. அது வாயப்பயம் இல்லை.
வாழைப்பழம். சொல்லு.

மாண2: வாயைப்பயம்.

ஆசி: தம்பி 'ய' இல்லப்பா. 'ழ'.

மாண2: ய

ஆசி: தம்பி நாக்க நல்லா மடிச்சு சொல்லு. 'யா'. (மாணவர்கள் சிரிக்கிறார்கள்).

ஆசி: (தவறை உணர்ந்து) ச்சே.ச்சே 'ழா'. சொல்லு.

மாண2: யா

ஆசி: தம்பி நாளைக்கு வரும் போது அப்பாவ கூட்டிக்கிட்டு வா. சரியா.

மாண2: சரி அய்யா.


மறுநாள் மாணவனின் தந்தையிடம்,

மா.த: வணக்கம் சார். வரசொன்னியலாம்ல.

ஆசி: வணக்கம். உங்க பையனுக்கு 'பழம்'ன்னு சொல்லவே தெரியவில்லை.
அதைச்சொல்லத்தான் வரச்சொன்னேன்.

மா.த: ஆமாஞ்சார். நானும் பாத்திருக்கேன். "அவன 'பயம் பயம்'ன்னு சொல்லச்சொன்னா, பயபுள்ள 'பயம் பயம்'ன்னுதான் சொல்றான ஒயிய 'பயம் பயம்'ன்னு சொல்லவே மாட்டங்குறான்".

அதிலிருந்து அந்த ஆசிரியர் அந்த வகுப்புக்கு வரவே இல்லை.
அந்த மாணவனின் பட்டபெயர் 'பயம்' என்று ஆனது.

-----------------------------------------------------------------------------------
தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
நன்றி.
------------------------------------------------------------------------------------

6 comments:

Prathap Kumar S. said...

நல்ல கொசுவத்தி சுருள் பதிவு...சிரிக்க முடிந்தது

குடிகாரன் said...

நன்றி விமர்சகன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது அந்த ஊர்காரங்களப் பத்தித்தானே தல,..,

குடிகாரன் said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
இது அந்த ஊர்காரங்களப் பத்தித்தானே தல,..,//

ஆமா தல. கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்களே.

Nathanjagk said...

கொசுவத்தி சுருள்தான்... ஆனா ​கொஞ்சம் ​பெரிய்ய்ய சுருள். நல்லாயிருக்கு! வாய்த்துகள்!

Hindu Marriages In India said...

vaazhha!