Saturday, August 15, 2009

அலமேலுவுக்கு அஞ்சு புள்ள பொறந்தது எப்படி??

இது ஒரு உண்மை அனுபவம்.


'புள்ள பொறக்குறது மேலே இருக்குறவன் கொடுக்கிற வரம்' அப்படின்னு துபாயின் பெரும்பான்மை இனமான MM (மானாட மயிலாட இல்லை. Maலையாள Muஸ்லீம்)ங்கள் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டே இருக்காங்க. இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு சின்ன(!) அனுபவம்.

ஒரு மூணு வருஷத்துக்கு முன்னால ஒரு கம்பெனியில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். அப்போ மேற்படி இனத்தை சேர்ந்த நண்பர் ஒருத்தர் இருந்தாரு. ரொம்ப நல்லா பழகுவாரு. தங்கமான குணம். கல்யாணம் ஆகி அஞ்சு வருஷத்துல நாலு குழந்தைகள். ரொம்ப சந்தோஷமான குடும்பம். நார்மலான சம்பளம். கரெக்டா ஊருக்கு பணம் அனுப்பிடுவாரு. (அப்போதைக்கு Exchange Rate 1திர்ஹாமுக்கு 10ரூபாய் 70பைசா). நாலாவது குழந்தை பிறந்ததற்குப்பிறகு ரெண்டு மாச லீவுல ஊருக்கு போனாரு.

லீவு முடிஞ்சு திரும்பி வந்து இரண்டு வாரத்துக்கு பிறகு எல்லாத்துக்கும் ஸ்வீட் கொடுத்துக்கிட்டு இருந்தாரு. ஏன்னு கேட்டா மனைவி முழுகாம இருக்காங்கன்னு சொன்னாரு. கம்பெனியில அவர கிண்டல் பண்ணாத ஆளே கிடையாது. லீவுக்கு போனா வேற வேலையே இல்லையான்னு கலாய்ச்சுகிட்டு இருந்தாங்க. அவரு அமைதியா சொன்னாரு 'எல்லாம் மேலே இருக்கிறவன் கொடுக்கிறான். நம்ம என்ன பண்ணுறது'ன்னு. எல்லாம் முடிஞ்சு நானும் வேற கம்பெனி மாறியாச்சு.

சமீபத்துல ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒரு சூப்பர் மார்க்கெட்டுல அவரை சந்திச்சேன். ஆளே ரொம்ப மாறி போயி 'ஓ'ன்னு இருந்தாரு. 'என்னண்ணே இப்படி ஆயிட்டீங்க'ன்னு கேட்டதுக்கு, 'என்ன தம்பி பண்ணுறது. குடும்பம் பெரிசா போச்சு. ரொம்ப கஷ்டமாயிருக்கு' அப்படின்னு சொன்னாரு.

காரணம் இதுதான். அவருக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். சம்பளம் கொஞ்சமாதான் ஏறியிருக்கு. (ஆனா இப்போதைய Exchange Rate 1திர்ஹாமுக்கு 13ரூபாய்). இருந்தாலும் பேமிலிய மெயின்டெயின் பண்ண முடியாத அளவுக்கு செலவுகள். ஏகப்பட்ட கடன் (துபாயிலும், நாட்டிலும்). ரொம்ப ஒடிஞ்சு போயி எல்லாத்தையும் சொன்னாரு. நானும் என்னோட மொபைல் நம்பர கொடுத்து ஏதாவது ஹெல்ப் வேணும்னா போன் பண்ண சொல்லிட்டு வந்துட்டேன்.

நேத்து போன் பண்ணியிருந்தாரு. 'தம்பி இப்போ வேலை பாக்குற கம்பெனியில என்னை வேலைய விட்டு தூக்குற மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க'ன்னு சொல்லிக்கிட்டிருக்கும் போது போன் கட்டாயிருச்சு. திரும்ப போன் பண்ணி பேசும்போது ரொம்ப புலம்பினாரு. 'அப்போ எல்லாரும் கிண்டல் பண்ணும்போது எனக்கு ஒன்னுமே பெரிசா தெரியல. இப்போதான் எல்லாம் புரியுது. எல்லாத்தையும் மேல இருக்குறவன் பாத்துக்க மாட்டான். நாமளும் வாழ்க்கைய புரிஞ்சு நடந்துக்கணும்' அப்படின்னு எனக்கு அட்வைஸ் வேற பண்ணுனாரு. நல்ல வேளை கிரெடிட் கார்டு எதுவும் இல்லை.

இன்னைக்கு காலையில ஏர்போர்ட்ல இருந்து போன் பண்ணி 'என்ன கேன்ஸல் பண்ணிட்டாங்க. ஏர்போர்ட்ல இருக்கேன்' அப்படின்னு சொன்னாரு. 'இன்னைக்கு லேபர் ஆபிஸ் லீவாச்சே. எப்படி கேன்ஸல் பண்ண முடியும்'ன்னு கேட்டதுக்கு 'அதெல்லாம் முந்தா நேத்தே எல்லாத்தையும் முடிச்சுட்டாங்க. எனக்கு இப்போதான் தெரியும்'ன்னு சொன்னாரு. ரொம்ப வருத்தத்தோட இன்னொரு பிரண்டுக்கு போன் பண்ணி சொன்னேன்.

அவரு சொன்னதை கேட்டு திகைச்சு போயிட்டேன். அவரோட மனைவி எட்டாவது பிரசவத்துக்காக ஹாஸ்பிட்டல்ல இருக்காங்க.(ஒரு குழந்தை இறந்து போயிடுச்சாம்). பிரசவம் பிரச்சனையா இருக்குமுன்னு டாக்டர் சொல்லியிருக்காங்க. அதுக்கு பணம் ரெடி பண்ண வழி தெரியாம கம்பெனி மெட்டீரியல்ல கைய வச்சுட்டாரு. அதனாலதான் வேலைய விட்டு தூக்கிட்டாங்கன்னாரு. என்னால அதுக்கு மேல எதுவும் சோல்ல முடியாம போனை வச்சுட்டேன்.

வளர்ந்த நாட்டுல இருக்கறவங்களே அதிக குழந்தை அதிக செலவுன்னு ஒன்னு ரெண்டோட நிறுத்தும் போது நமக்கு ஏன் இத்தனை?. யோசிப்போம்.

சிறு குடும்பம் சீரான வாழ்வு.
பெரிய குடும்பம் பேராபத்து.

------------------

தலைப்பு : கடைசியா டைப் பண்ணுனதுனால என்ன வைக்கிறதுன்னு தெரியல.

-----------------

2 comments:

Anonymous said...

பெண்கள் கல்விதான் முக்கியத் தேவை.

ஆண்கள் கலவிதான் முக்கியத் தேவை என்பதை மாற்றிப் பெண்கள் கல்விக்கு முக்கியம் கொடுப்பதுதான் வழி.
வாழ்க்கை வாழ்வதற்கு, பிள்ளை பெறுவதற்கு மட்டுமல்ல.
உலகக் கத்தோலிக்கர்களே போப்பாண்டவரை எதிர்த்துக் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கிறார்கள்.
மேலே ஒன்றுமில்லை, ஆணுறை,பெண் பாதுகாப்பின் அவசியம் அனைவர்க்கும் தெரிய வேண்டும்.

Raju said...

சிறு குடும்பம் சீரான வாழ்வு.
பெரிய குடும்பம் பேராபத்து.

சரிதான்..!?!?